சர்கார் பட விவகாரம்.... ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ்
Published on

விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இப்படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை செய்த திரைப்படத்தை தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com