கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன்... ரசிகருக்கு பிரியாமணி பதில்

முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை பிரியாமணி, கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.
பிரியா மணி
பிரியா மணி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்தது. 

இதில் ரசிகர் ஒருவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்க அதற்கு பதில் அளித்த பிரியாமணி, ’எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com