‘நரகாசூரன்’ படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதிலும் நீடிக்கும் சிக்கல்?

கார்த்திக் நரேன் - அரவிந்த் சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நரகாசூரன் படத்தின் போஸ்டர்
நரகாசூரன் படத்தின் போஸ்டர்
Published on

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நரகாசூரன்’. கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது. 

இதனிடையே அண்மையில், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முயற்சி நடப்பதாகவும், ஆகஸ்ட் 13-ந் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நரகாசூரன் படக்குழு

பைனான்சியர்களிடம் இருந்து இந்தப் படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி ‘நரகாசூரன்’ வெளியாவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com