மாநாடு நாளை ரிலீஸ் இல்லை... பிரச்சனையால் மீண்டும் தள்ளிபோனது

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாநாடு படத்தில் சிம்பு
மாநாடு படத்தில் சிம்பு
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (நாளை) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com