கொரோனா தடுப்பு பணிக்கு லைகா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
லைகா நிறுவனம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் ரூ.2 கோடிக்கான காசோலை வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
லைகா நிறுவனம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் ரூ.2 கோடிக்கான காசோலை வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
Published on

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து, 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

சுபாஸ்கரன் 

லைகா புரோடக்சன்ஸ் நிறுவனம் தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com