பர்ஸ்ட் லுக்கில் ரஜினி.... செகண்ட் லுக்கில் கமல் - வைரலாகும் ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ போஸ்டர்

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமல், ஹரிஷ் கல்யாண்
கமல், ஹரிஷ் கல்யாண்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படத்தை இளன் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் இளன் - ஹரிஷ் கல்யாண் - யுவன் ஆகியோர் புதிய படம் மூலம் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.  

‘ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், ரஜினியின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் ‘தளபதி’ படத்தின் ரஜினி போல் ஹரிஷ் கல்யாணின் தோற்றம் அமைந்திருந்தது. 

இந்நிலையில், அப்படக்குழு செகண்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமல் போல் ஹரிஷ் கல்யாண் காட்சி அளிக்கிறார். இந்த போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com