சூர்யா - ஜோதிகாவுக்காக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் பிரபல பெண் இயக்குனர்

நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகவும், பிரபல பெண் இயக்குனர் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம்.
சூர்யா, ஜோதிகா
சூர்யா, ஜோதிகா
Published on

நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பதற்கான ஒரு கதையை தயார் செய்து வருவதாக சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலீதா ஷமீம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது: “சில்லுகருப்பட்டி படத்தின் 50-வது நாள் வெற்றியை சூர்யாவின் வீட்டில் கொண்டாடிய போது தான் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன். அப்போது சூர்யா சார் என்னிடம், நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு கதை தயார் செய்யுங்கனு சொன்னார். அவர்களுக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். விரைவில் அதை முடித்துவிடுவேன்” என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com