கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி ஸ்டாலினிடம் காசோலையை வழங்கிய போது எடுத்த புகைப்படம்
இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி ஸ்டாலினிடம் காசோலையை வழங்கிய போது எடுத்த புகைப்படம்
Published on

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார். 

சுசீந்திரன்

கடந்த ஜூன் 14-ம் தேதி ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்பு நடத்திய சுசீந்திரன், அதன்மூலம் ரூ.5 லட்சம் நிதி திரட்டினார். அந்த தொகையை தான் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் வழங்கி உள்ளார். இயக்குனர் சுசீந்திரன், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com