இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் வீட்டில் நடந்த சோகம்

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் வீட்டில் சோகம் நடந்துள்ளது.
எஸ்.ஆர்.பிரபாகரன்
எஸ்.ஆர்.பிரபாகரன்
Published on

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். 

எஸ்.ஆர்.பிரபாகரன் அவரது தாயார்

தற்போது இவர் சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபாகரனின் தாயார் எஸ்.ராஜலெட்சுமி (வயது 66) நேற்று மதுரையில் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com