இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ்
தனுஷ்
Published on

நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். இதுதவிர அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், விரைவில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். 

அதன்படி சேகர் கம்முலா இயக்கும் தெலுங்கு படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது ஒருபுறம் இருக்க, தமிழிலும் 5 படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். 

இளன்

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இளன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com