ரிலீசுக்கு முன்னரே ரூ.150 கோடிக்கு விலைபோன விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்

தெலுங்கில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமை நல்ல விலைக்கு போயுள்ளதாக கூறப்படுகிறது. #SyeraaNarasimhaReddy
ரிலீசுக்கு முன்னரே ரூ.150 கோடிக்கு விலைபோன விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்
Published on

சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. 

சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமை ரூ.150 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு நவம்பரில் முடிக்கப்பட்டு படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. #SyeraaNarasimhaReddy

X

Maalai Malar
www.maalaimalar.com