சொடக்கு பாடலுக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட் தள்ளிவைப்பு

சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடலுக்கு எதிரான வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொடக்கு பாடலுக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட் தள்ளிவைப்பு
Published on

அ.தி.மு.க. இளைஞர் பாசறை நிர்வாகி சதீஷ்குமார். ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்‘ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இதில் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

அந்த பாடலில் அரசியல்வாதிகளை அவதூறாக சித்தரிக்கும் வரிகள் இடம் பெற்றுள்ளது. அரசியல்வாதிகளை பார்த்து விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்று வரிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் வன்முறை தூண்டப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த வரியை அகற்றவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹூலு வாடி ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com