

இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார்.
இதன்பிறகு நடிகை சன்னிலியோன் இந்தியாவில் எந்த பகுதிக்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய நடிகைகளை பார்க்கக்கூடும் ரசிகர்களை விட அதிக கூட்டம் சன்னி லியோனுக்கு கூட தொடங்கிவிட்டது. சமீபத்தில் கூட கேரளா சென்ற சன்னிலியோனை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கொச்சியே ஸ்தம்பித்தது.
இப்படி இருக்கையில் சன்னிலியோன் அடுத்ததாக சென்னை வர இருக்கிறார்.
வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக்கிறார். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கிறார்.