கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி

கலகலப்பு படத்தை போல, கலகலப்பு-2 படத்திலும் ஹோட்டலை வைத்து படம் உருவாக்கவில்லை. அதற்கு மாறாக ஒரு மேன்சனை வைத்து படத்தின் கதையை கொண்டு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார்.
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
Published on

சுந்தர்.சி இயக்கத்தில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. குஷ்பு சுந்தர்.சி தயாரித்துள்ளார். ஜீவா, ஜெய், சிவா, நாயகர்களாக நடிக்கும் இதில் நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா நாயகியாக நடித்துள்ளனர்.

‘‘கூட்டமே இல்லாத மேன்சனை வைத்து கஷ்டப்படும் ஒருவன், பாரம்பரிய சொத்துக்களை இழந்து தவிக்கும் ஒருவன், ஒவ்வொருவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் மற்றொருவன். இந்த 3 பேரும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதே ‘கலகலப்பு-2’ படத்தின் கதை.

சம்பவங்கள் காசியில் நடப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகிகளில் ஒருவர் படகோட்டி, இன்னொரு நாயகி தாசில்தார். இந்த படத்தில் யோகிபாபு, முனிஸ்காந்த், சதீஷ் உள்பட 10 நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை மட்டுமல்ல, பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஹிப்ஹாப் தமிழா இதற்கு சிறப்பாக இசை அமைத்துள்ளார். ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் கதையாக உருவாக்குகிறேன். கதாநாயகர்களுக்காக கதை எழுதி தயாரிப்பதில்லை. திரைக்கதையை உருவாக்கியபிறகு அதற்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைக்கிறேன்.

இந்த படத்துக்கு ஜெய் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ‘சங்கமித்ரா’ படத்துக்கான திரைக்கதை, கிராபிக்ஸ் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும். ‘கலகலப்பு-2’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com