தனது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் சுந்தர்.சி

`சங்கமித்ரா' பிரமாண்ட படத்திற்கு முன்பாக இயக்குநர் சுந்தர்.சி, அவரது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
தனது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் சுந்தர்.சி
Published on

ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். `சங்கமித்ரா' என்ற பதுமையை வைத்தே இந்த கதை நகர்வதால் `சங்கமித்ரா' கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான நடிகை சுருதி ஹாசன் படத்தில் இருந்து விலகியதால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.

அதற்கான நடிகை தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரமாணண்ட செட்களும் அமைக்கப்பட வேண்டி இருப்பதால்,  இதற்கிடையே இயக்குநர் சுந்தர்.சி `கலகலப்பு' படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, `கலகலப்பு 2' படத்தின் கதையை எழுதுவதில் சுந்தர்.சி. தீவிரம் காட்டி வருகிறாராம்.

`கலகலப்பு 2' படத்தையும் ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே இரண்டாவது பாகத்திலும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியிருக்கும் ஓவியா இந்த படத்திலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2012-ஆம் வெளியாகி `கலகலப்பு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com