

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சுசித்ராவின் கணவர் கார்த்திக், அவரது டுவிட்டர் பக்கத்தில் அவரது அடுத்த நிகழ்ச்சி குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவின் முடிவில் அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்த சுசித்ராவை காண்பித்தார்.
தற்போது, அமெரிக்காவில் இருக்கும் சுசித்ரா, தான் மனஉளைச்சலில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த மாதம் நடந்த சம்பவங்கள் குறித்து தான் மிகவும் வருத்தப்பட்டு வருவதாகவும், தனது நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அதே வேளையில் எனது நண்பர்கள் யாரையும் நான் இழக்க நினைக்கவில்லை. யாரும் என்னை விட்டு விலகாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.