கட் அவுட்டுக்கு பால் ஊற்றச் சொல்லவில்லை - மன்னிப்பு கேட்ட சிம்பு

கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
கட் அவுட்டுக்கு பால் ஊற்றச் சொல்லவில்லை - மன்னிப்பு கேட்ட சிம்பு
Published on

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

சிம்பு தனது ரசிகர்களிடம் ’இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இது சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் ‘சிம்புவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா, விளம்பரத்துக்காகத்தான் இதை அவர் செய்கிறார் எனவும் விமர்சித்தார்கள். இதனால் கோபமான சிம்பு ‘என் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்’ என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையானது. இதுபற்றி பால் முகவர் சங்கத்தினர் கமி‌ஷனரிடம் புகார் கொடுக்கும் வரை சென்றது.

தேனாம்பேட்டை குடிசை பகுதியை சேர்ந்த மதன் என்ற சிம்பு ரசிகர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் படம் வைரல் ஆனது. அந்த ரசிகரின் வீட்டுக்கு இன்று வந்த சிம்பு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு உடைகள் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ‘கட்அவுட் வைக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையால் என் ரசிகர் பலியானதால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். அது எல்லோரையும் சென்று சேரவில்லை. சிலர் விமர்சித்ததற்கு பதிலடியாக எதிர்மறையாக சில வி‌ஷயங்கள் கூறினேன். அது எல்லோரையும் சென்று சேர்ந்து சர்ச்சையாகிவிட்டது.

பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டாவில் பால் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றி பேசவில்லை. எல்லோரையும் மாற்றுவதற்காக பேசுகிறேன்.

இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். வாய் இல்லாத கட் அவுட்டுக்கு ஊற்றுவதற்கு பதிலாக படம் பார்க்க வரும் வாய் உள்ள மனிதர்களுக்கு ஊற்றிக் கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றை மதிப்பவன் நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை’.

இவ்வாறு அவர் கூறினார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com