ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வரும் சிம்பு அவரது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.
ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சிம்பு
Published on

இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ல் வெளியாக இருக்கிறது.
இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.

அதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லரை அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிம்பு தற்போது டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்புவின் அறிமுக பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வரும் சிம்பு, சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அது என்னவென்றால்,

"எதிர்மறை கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதீர்கள், மாறாக நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள், பகிருங்கள். அன்பை வெளிப்படுத்துங்கள், கடவுள் ஆசிர்வதிப்பார்"

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com