கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்- கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கமி‌‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி
Published on

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி, நேற்று சென்னை போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்துக்கு வந்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- தற்போது 2 படங்களில் நடித்து வருகிறேன். தமிழக மக்கள் எனக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். 

இந்தநிலையில் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தெலுங்கு துணை நடிகை ஒருவரும், 50 வயது நிரம்பிய டான்ஸ் மாஸ்டர் ஒருவரும் என்னைப்பற்றி தரக்குறைவான தகவல்களை வெளியிடுகிறார்கள். 

நான் வீடு வாங்கியது, கார் வாங்கியது எப்படி? எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர்? என்பது பற்றியெல்லாம் அவதூறு தகவல்களை வெளியிடுகிறார்கள். அது எனது தனிப்பட்ட வி‌‌ஷயம். மேலும் என்னை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளேன். சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. புகார் தொடர்பான உரிய ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com