ரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்

நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
ரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்
Published on

‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் நெல்சன் பேசும்போது, குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும்.

நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com