எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகும் முதல் யு சான்றிதழ் படம்

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் முதல் யு சான்றிதழ் பெற்ற ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #SJSuryah
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகும் முதல் யு சான்றிதழ் படம்
Published on

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.

குழந்தைகளுக்கும்... செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com