அஜ்மீர் தர்காவில் சிவகார்த்திகேயன், நயன்தாரா வழிபாடு

நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை நயன்தாராவும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
அஜ்மீர் தர்காவில் சிவகார்த்திகேயன், நயன்தாரா வழிபாடு
Published on
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்து வருகிறது. அங்கு புகழ் பெற்ற தர்காவாவில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் சென்று வழிபாடு செய்துள்ளனர்.

நயன்தாரா தலையில் முக்காடு போட்டும், சிவகார்த்திகேயன் தலையில் ரோஸ் கலர் துணி கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் பிரபலங்கள் தங்களின் படம் ரிலீசாகும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்வார்கள். அதுபோல், சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் தர்காவுக்கு சென்றுள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆடும் டூயட் பாடலை படமாக்கவே படக்குழு அஜ்மீர் சென்றுள்ளனர். விவேகா எழுதியுள்ள பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து படமாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com