

இது குறித்து நமீதா பாபு பேசுகையில், ''எனது பாடகி வாழ்க்கைக்கு கிடைத்திருக்கும் துவக்கம் மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளது. 'சண்டிவீரன்' படத்தில் அழகான பாடலோடு ஆரம்பித்த எனது பயணம் 'திருநாள்' படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்தது. பிறகு 'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான், இரண்டு முத்தான பாடல்களை எனக்கு தந்து எனக்கு பல பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்று தந்தார்.