நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் - ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் படத்திற்கு `அவள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படம் வருகிற நவம்பரில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'
Published on

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `ஜில் ஜங் ஜக்' நல்ல வரேவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, சித்தார்த் அடுத்ததாக கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் `சைத்தான் கா பச்சா' படத்திலும், மிலின்ட் ராவ் இயக்கத்தில் த்ரில்லர் படம் ஒன்றிலும் நடித்து வந்தார். இதில், மிலண்ட் ராவ் இயக்கி வரும் படத்திற்கு `அவள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா ஜெரோமியா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. மற்ற மொழிகளில் இந்த படம் `தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தை வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சித்தார்த்தின் எடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com