கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து சுருதிஹாசன் கருத்து

தமிழக அரசியலில் களம் காணவிருக்கும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தமிழக அரசியலில் கமல் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து சுருதிஹாசன் கருத்து
Published on

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தந்தை அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து சுருதிஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை உங்கள் தந்தை நிரப்புவாரா? என்று கேட்கப்பட்டதற்கு கருதி ஹாசன் கூறியதாவது:-

எனது தந்தைக்கு என்று தனியாக கொள்கைகளும், நம்பிக்கைகளும் உள்ளன. அவரது வழியில் அதைப்பின் பற்றி செல்கிறார். அவருக்கு எனது ஆதரவு உண்டு.

நான் பணிவுடன் தந்தையைப்பற்றி சொல்வதென்றால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்கு நாம் அவரை வாழ்த்த வேண்டும்.

வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்பது மட்டுமல்ல, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. அது மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றத்தைப்போல் இருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.

எனது தந்தை நாத்திகம் பேசுபவர். நான் மத நம்பிக்கை கொண்டவள். அவரவர் பாதையில் செல்ல வேண்டும் என்று எங்களை ஊக்குவிப்பார். மற்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு பின் தொடரக்கூடாது என்று சொல்வார். அவரது அரசியல் கொள்கைகள் பற்றி முழுவதுமாக நான் தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார். #Kamalhaasan #KamalHaasanPoliticalEntry #MakkalNeedhiMaiam 

X

Maalai Malar
www.maalaimalar.com