உளவியல் கதையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படம் ஒரு உளவியல் டிராமா என்று ஷ்ரத்தா கூறியிருக்கிறார். #ShraddhaSrinath
உளவியல் கதையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
Published on

ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது படமான ‘யு டர்ன்’ என்ற கன்னடப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு வெளியான ‘விக்ரம் வேதா’ பெரிய ஹிட்டாக, மறுபடியும் மாதவன் ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பரத் நீலகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார்.

எஸ்.பி. சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. “முதலில் இந்தப் படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை. திடீரென்று தான் அது நிகழ்ந்தது. கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார் பரத் நீலகண்டன். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார். ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் அழகாகப் பிணைத்து அவர் வடிவமைத்திருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தை திரில்லர் வகையில் சேர்க்க முடியாது. உளவியல் டிராமா என்று கூறலாம்” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். #ShraddhaSrinath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com