பாலா இயக்கத்தில் நடிக்கிறாரா ஷரத்தா ஸ்ரீநாத்?

விக்ரம் வேதா, ரிச்சி படம் மூலம் புகழ் பெற்ற ஷரத்தா ஸ்ரீநாத், பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் நடிக்கிறாரா ஷரத்தா ஸ்ரீநாத்?
Published on

தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா பேசிய வசனம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தையடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான, அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை எடுக்க இருக்கிறார் பாலா. இதில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் முதல் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், பாலா இயக்கும் படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அனுஷ்கா போன்ற ஸ்டார்களை இணைத்து பாலா படம் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. அந்தப் படத்தில் விக்ரம் வேதா புகழ் ஷரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். அநேகமாக இப்படம் குற்றப்பரம்பரையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com