

ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களில் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து வரும் நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. அந்த பாடலை சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் கூடுதலாக இருக்கும். அதிலும் பாடல் காட்சிகளுக்காக விதவிதமான இடங்களில் பல வர்ணஜாலங்களை நிகழ்த்தி ரசிக்க வைப்பார். இந்நிலையில், அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் `2.0' படத்தில் மீதமிருக்கும் அந்த ஒரு பாடலை முழுக்க முழுக்க ஸ்டூடியோவில் எடுக்க ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம்.
ஏ.ஆர்ரகுமானின் ஒய்.எம்.ஸ்டூடியோவில் அந்த பாடல் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அந்த ஸ்டூடியோவில் எடுக்கப்படும் முதல் படம் என்றும் கூறப்படுகிறது.