அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்

கொடி வீரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எதிரிகளை அசுர வதம் செய்ய வருகிறார் நடிகர் சசிகுமார்.
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
Published on
‘பலே வெள்ளையத் தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் ‘கொடிவீரன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் மகிமா, பூர்ணா, சனுஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். முத்தையா இயக்கி வரும் இப்படத்தை சசிகுமார் தனது, கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இதற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற நவம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சசிகுமார். இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘அசுரவதம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை மருது பாண்டியன் இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள ஹீரோயின், இதர நடிகர்கள், பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com