விஷாலுடன் மோத விரும்பாத சரத்குமார்

சரத்குமாரும், விஷாலும் ஒரே நேரத்தில் படங்களை வெளியிட்டு போட்டி போடவுள்ள நிலையில், தற்போது சரத்குமார் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
விஷாலுடன் மோத விரும்பாத சரத்குமார்
Published on
சரத்குமாரும், விஷாலும் நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்து போட்டி போட்டனர். இதன்பிறகு சரத்குமாரின் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படமும், விஷாலின் ‘துப்பறிவாளன்’ படமும் ஒரே நாளில் மோதுவாக அறிவித்தார்கள். இந்நிலையில், விஷால் படத்துடன் சரத்குமார் படம் வெளியாகவில்லை என்று அறிவித்திருக்கின்றனர்.

சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒரு நாள்’ படம் வெற்றி பெறவே அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தனர். கல்பதரு பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘சென்னையில் ஒரு நாள் – 2’ வரும் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர்.

தற்போது, இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி ‘சென்னையில் ஒரு நாள் - 2’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
X

Maalai Malar
www.maalaimalar.com