திருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடித்தது குறித்து சமந்தா விளக்கம்

சமந்தாவின் திருமணத்திற்கு பிறகு வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ராம்சரணுடன் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து சமந்தா விளக்கம் அளித்திருக்கிறார். #Rangasthalam #Samatha
திருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடித்தது குறித்து சமந்தா விளக்கம்
Published on

ராம்சரண்-சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராம்சரணுடன் சமந்தா நெருக்கமாக நடித்துள்ளார். முத்தக்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதை சிறப்பாக படமாக்கிய இயக்குனருக்கு தயாரிப்பாளர் ரூ.10 லட்சம் பரிசு கொடுத்த தகவலும் வெளியானது.

‘ரங்கஸ்தலம்’ படத்தில் சமந்தா முத்தக்காட்சியில் நடித்தது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, ‘திருமணத்துக்குப் பிறகு முத்தக்காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த சமந்தா....

“திருமணம் ஆன நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது இல்லை. அதுவே நடிகைகள் என்றால்... ஏதேதோ கேட்கிறீர்கள்.

படப்பிடிப்பின் போது நான் ராம்சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை ‘கேமரா டிரிக்ஸ்’ மூலம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டது போல் மாற்றிவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை...”என்று கூறி சமாளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com