ரம்மி பட இயக்குனரின் அடுத்த படைப்பு

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘ரம்மி’ படத்தை இயக்கிய இயக்குனர், அடுத்ததாக ‘கதாயுதம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரம்மி பட இயக்குனரின் அடுத்த படைப்பு
Published on
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ரம்மி’. இப்படத்தை பாலகிருஷ்ணன்.கே இயக்கி இருந்தார். இவர் அடுத்த படத்திற்கு ‘கதாயுதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது.

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம். அதுபோல், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, ‘வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது’ என்றார்.
X

Maalai Malar
www.maalaimalar.com