பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.10 கோடி நஷ்டம்

கியூப் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9-வது நாளாக பட அதிபர்கள் போராட்டம் நடத்தி வருவதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TFPCStrike
பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.10 கோடி நஷ்டம்
Published on

இருதரப்பினருக்கும் பல கட்டங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்டன. இதனால் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நேற்று 9-வது நாளாக நீடித்தது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பெரிய மற்றும் சிறிய பட்ஜெட்டில் தயாரான ஐந்து அல்லது 6 புதிய படங்கள் திரைக்கு வருவது வழக்கம்.

ஆனால் கடந்த வாரமும் நேற்றும் படங்கள் வெளியாகவில்லை. தாராவி படம் மட்டும் தடையை மீறி வெளிவந்தது. தற்போது தியேட்டர்களில் திரையிட புதிய படங்கள் இல்லாததால் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களையும் விஜய், அஜித்குமார் ஆகியோர் நடித்துள்ள மெர்சல், வீரம் மற்றும் பாகுபலி படங்களையும் மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com