சுஷாந்துடன் ‘லிவ்விங்-டூ-கெதர்’... ஓராண்டு வாழ்ந்தேன் - காதலி ரியா

சுஷாந்துடன் லிவ்விங்-டூ-கெதராக ஓராண்டு வாழ்ந்ததாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி
சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி
Published on

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்திருந்தார். ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், மன ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளாராம். அதில், சுஷாந்துடன் நான் கடந்த ஓராண்டு காலமாக லிவ்விங்-டூ-கெதராக ஜுன் 8 வரை வாழ்ந்தேன். அதன்பின் அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். சுஷாந்த் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாகவும் ரியா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். மேலும், தன்னைத் துன்புறுத்தவே சுஷாந்த்தின் தந்தை, இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளதாக நடிகை ரியா, குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com