காதல் மன்னனாகவே வாழ்ந்த துல்கர் சல்மான்

தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் `நடிகையர் திலகம்' படத்தில் காதல் மன்னனாக நடிக்கும் துல்கர் சல்மான் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
காதல் மன்னனாகவே வாழ்ந்த துல்கர் சல்மான்
Published on

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினிகணேசனாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

பத்திரிகை நிருபராக நடிகை சமந்தா முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டேவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் ‘நடிகையர் திலகம்’, தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் `காதல் மன்னன்' ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்கர் சல்மான் அவரது காட்சிகளை நடித்து முடித்திருப்பதாகவும், காதல் மன்னனாக அவரது பங்களிப்பபை  சிறப்பாக தந்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். இந்த படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com