சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை

`கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தானாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதால் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RashmikaMandanna
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
Published on

‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

இதையடுத்து ராஷ்மிகாவின் மார்கெட்டும் எகிறத் தொடங்கியது. தற்போது அவருக்கு தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. பல மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. திருமணத்தில் ராஷ்மிகா ஆர்வம் இல்லாமல் இருந்தார். இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர்கள் மறுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் திருமணத்தை ராஷ்மிகா நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நெருங்கிய உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ராஷ்மிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதுவே திருமணத்தை ரத்து செய்ய காரணம் என்று கூறுகிறார்கள். இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டு உறவினர்களும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்து விட்டது என்கின்றனர். பெற்றோர்களுடன் கலந்து பேசி அவர்கள் சம்மதத்துடன் ராஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. #RashmikaMandanna #GeethaGovindam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com