சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரம்பா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rambha
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரம்பா
Published on

தமிழ் பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரம்பா. 1990-களில் பிசியாக இருந்த இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பிரபு, சரத்குமார் உள்பட பல பிரபல நாயகர்களுடன் நடித்து இருக்கிறார்.

திருமணம் முடிந்தபிறகு கணவர், குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வந்தார். இந்த நிலையில், அங்கிருந்து திரும்பி வந்த ரம்பா ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டார். என்றாலும், படங்களில் நடிக்கவில்லை. இப்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குணச்சித்திர வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டுள்ளார்.

விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்திருக்கும் ரம்பா, இனியும் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. #Rambha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com