கனவு நிறைவேறி விட்டது - ரகுல் பிரீத்திசிங்

தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ரகுல் பிரீத்திசிங் ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டதாக உணர்வதாக கூறியிருக்கிறார். #SK13
கனவு நிறைவேறி விட்டது - ரகுல் பிரீத்திசிங்
Published on

தெலுங்கு பட உலகில் முன்னணி இடம் பிடித்து இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். இப்போது தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கிறார்.

இது குறித்து கூறிய ரகுல் பிரீத்திசிங்...

“ நான் சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறேன். செல்வராகவன் கலைஞர்களின் முழு திறமையை வெளியே கொண்டு வருபவர். அவருடன் இந்த படத்தில் இணைந்தது மகிழ்ச்சி.

“கார்த்தி படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன். சினிமா என்றாலே பொழுது போக்கு தான். உண்மை கதைகளில் நடித்துக்கொண்டே இருந்தால் நடனம் ஆட முடியாது. சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இந்த படம் குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். 

நான் ஏ.ஆர்.ரகுமான் சார் இசையை எப்பொழுதும் ரசித்து கேட்பேன். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் சார் இசை அமைக்கிறார் என்று தெரிந்ததும் என் கனவு நிறைவேறி விட்டது போன்று உணர்ந்தேன்.

இந்த படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். #SK13 #RakulPreetSingh

X

Maalai Malar
www.maalaimalar.com