சுஷாந்த் சிங் படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.... காரணம் தெரியுமா?

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் - சுஷாந்த் சிங்
ரஜினிகாந்த் - சுஷாந்த் சிங்
Published on

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த படம் 'தில் பெச்சாரா'. பாலிவுட் மட்டுமில்லாமல் உலக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த இப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது. 

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காரணம், தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் சிங், ரஜினியின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார். சுஷாந்த் சிங் பயன்படுத்தும் செல்போன் கவரில் கூட ரஜினியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார். நான் ரஜினியை வணங்குகிறேன் என்றும் படத்தில் கூறுகிறார். 

சமூக வலைதளங்களில் தில் பெச்சாரா படம் குறித்து நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் ரஜினியின் ரசிகர்கள் தில் பெச்சாரா படத்தையும் சுஷாந்தையும் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com