நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? பல்சர் சுனில் விளக்கம்

நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் பேட்டி அளித்திருக்கிறார்.
நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? பல்சர் சுனில் விளக்கம்
Published on

கேரளாவில் ஓடும் காரில் நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நடிகர் திலீப்பும் கைதானார். பல்சர் சுனிலின் வாக்குமூலத்தில் நடிகை கடத்தல் வழக்கில் மேடம் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வந்தார். அவர் திலீப்பின் 2-வது மனைவியான நடிகை காவ்யா மாதவனாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் பல்சர் சுனில் திடீரென நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பில்லை என கூறினார்.

இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் ஒரு வழக்குக்காக பல்சர் சுனில் ஆஜர்படுத்தப்பட்டார். வெளியே வந்த பல்சர்சுனில் இந்த தகவலை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com