நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ‘மேடம்’: பல்சர் சுனில் மிரட்டலால் காவல் நீட்டிப்பு

நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ‘மேடம்’ யார் என்று தெரிவிப்பேன் என பல்சர் சுனில் மிரட்டியதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், சிறப்பு அனுமதியுடன் அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ‘மேடம்’: பல்சர் சுனில் மிரட்டலால் காவல் நீட்டிப்பு
Published on

மேலும் போலீசார் சுனிலிடம் நடத்திய விசாரணையில் அவர், ஏராளமான குற்றச் செயல்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்சர் சுனிலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போதெல்லாம் அவர், இந்த வழக்கில் பெரும்புள்ளிகள் சிக்குவார்கள். இந்த வழக்கில் தொடர்பு டையவர்கள் யார்? என்பதை தெரிவிப்பேன்.

நடிகை கடத்தல் வழக்கில் பின்னணியில் உள்ள ‘மேடம்’ யார்? என்பதை வெளிப்படுத்துவேன் என்று கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று கண்டிப்பாக ‘மேடம்’ யார்? என்பதை கோர்ட்டுக்கு வரும்போது கூறுவேன் என்று சுனில் கூறியதால் பரபரப்பு நிலவியது.

இதனால் அங்கமாலி கோர்ட்டில் பல்சர் சுனிலை போலீசார் ஆஜர்படுத்துவதை எதிர்பார்த்து ஏராளமான நிருபர்களும் அங்கு திரண்டிருந்தனர். ஆனால் பல்சர் சுனிலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை.

கோர்ட்டின் சிறப்பு அனுமதி பெற்று அவரது காவலை 30-ந்தேதி வரை நீட்டித்து விட்டனர். இதனால் ‘மேடம்’ பற்றிய மர்மம் தொடர்ந்து நீடிக்கும் நிலை நிலவுகிறது. இதற்கிடையில் பல்சர் சுனிலின் வக்கீல் ஆளூர் கூறியதாவது:-

பல்சர் சுனிலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தாததன் பின்னணியில் சதித் திட்டம் உள்ளது. நடிகை கடத்தல் வழக்கில் மேலும் சில நடிகைகளுக்கு உள்ள தொடர்பு மற்றும் ‘மேடம்’ யார்? என்று பல்சர் வெளிப்படுத்தி விடுவார் என்பதால் இவ்வாறு நடந்துள்ளனர். பல்சர் சுனிலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி கோர்ட்டில் விரைவில் மனுத்தாக்கல் செய்வேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com