பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் அடுத்த மாதம் திருமணம்

பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனஸ் ஒன்றாக ஊர்சுற்றி வரும் நிலையில், இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. #PriyankaChopra #NickJonas
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் அடுத்த மாதம் திருமணம்
Published on

பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனசும் பொது இடங்களில் ஜோடியாக வரும் நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்கள், ஹாலிவுட் சீரியஸில் நடித்து வரும் நிலையில், பிரியங்காவுக்கும், நிக் ஜோனசுக்கும் பழக்கம் ஏற்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெருக்கத்தை அம்பலப்படுத்தின. 

அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனாஸ் குடும்ப திருமண நிகழ்ச்சியிலும், பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது உறவினர்களிடம் பிரியங்கா சோப்ராவை அவர் அறிமுகம் செய்து வைத்தார். தற்போது இருவரும் மும்பை வந்து இருக்கிறார்கள். வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது குடும்பத்தினரிடம் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தினார். 

அவர்களுக்கு நிக் ஜோனாசை பிடித்து விட்டதாகவும், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் கைகோர்த்து ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். தற்போது அவர்கள் கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கி விட்டு மும்பை திரும்புகிறார்கள். 

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் திருமணத்தை அடுத்த மாதம் (ஜூலையில்) நடத்த இரு வீட்டு குடும்பத்தினரும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PriyankaChopra #NickJonas

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com