காதலரை கரம்பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா - நிச்சயதார்த்தம் முடிந்தது

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலரான பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் மும்பையில் வைத்து இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #PriyankaNickEngagement
காதலரை கரம்பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா - நிச்சயதார்த்தம் முடிந்தது
Published on

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிக் ஜோன்ஸின் பெற்றோர் நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தனர். இன்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #PriyankaChopra #NickJonas #PriyankaNickEngagement #PriyankaChopraEngagement 

X

Maalai Malar
www.maalaimalar.com