வெள்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நடிகர் பிரித்விராஜ் வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பெரிய பாத்திரத்தின் மூலம் அவரது தாயார் மீட்கப்பட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Prithviraj
வெள்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு
Published on

கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. மாநிலமே வெள்ளத்தால் சூழ்ந்து இதுவரை 97-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்து உள்ளது. பிரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

அவர் வீடு வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியானது. பிரித்விராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அவசர உதவி எண்களையும் வெளியிட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு டீ, பிஸ்கட், ரொட்டி, போர்வை, நாப்கின், குழந்தைகள் அணியும் உடை இருந்தால் அளிக்குமாறு நடிகர் துல்கர் சல்மான் முகநூலில் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Prithviraj 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com