எம்.ஜி.ஆர். பட தலைப்பில் என் மகன் நடிப்பது பெருமை - பிரேமலதா விஜயகாந்த்

மதுரவீரன் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் டைட்டில். அவருடைய படத்தலைப்பில் என்னுடைய மகன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்று ‘மதுரவீரன்’ இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
எம்.ஜி.ஆர். பட தலைப்பில் என் மகன் நடிப்பது பெருமை - பிரேமலதா விஜயகாந்த்
Published on

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘மதுரவீரன்’. இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

“இது என்னுடைய மகன் சண்முக பாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து இருக்கலாம். எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார். அவரிடம் நாங்கள் அன்னார்ந்து பார்த்து தான் பேசவேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். இளைஞர்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இந்த படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை தான் நான் முதல் முறையாக பேசும் சினிமா மேடை. நான் தான் மதுரவீரன் படத்தின் கதையை முதலில் இயக்குனர் முத்தையாவிடம் கேட்டேன். கதை மிகவும் பிடித்திருந்தது. கதையை பற்றி நான் கேப்டனிடம் கூறியதும் அவரும் கேட்க வேண்டும் என்றார். அதற்கு காரணம் இது ஜல்லிகட்டை பற்றி கதை. இந்த காலத்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தான் முதன்முறையாக ஒன்றாக போராடினார்கள். அதனால் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும். மதுரவீரன் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் டைட்டில். அவருடைய படத்தலைப்பில் என்னுடைய மகன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ், படத்தின் இயக்குனர் பி.ஜி.முத்தையா, இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுப்புநாராயணன், தம்பி ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com