

இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்த பிரகாஷ் ராஜ், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியிருந்தார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் இது குறித்து பேசும்போது,
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள்.
மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார்.
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முயற்சி செய்கிறார் என்றார்.