பொங்கல் களத்தில் பிரபுதேவா

சூர்யா, விஷால், விக்ரம் படங்களை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் காமெடி படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அறம் படத்தை தயதாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com