பாகுபலிக்காக 6,000 பேரை நிராகரித்த பிரபாஸ்

பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சுமார் 6,000 பெண்களை பிரபாஸ் நிராகரித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது எதற்காக என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பாகுபலிக்காக 6,000 பேரை நிராகரித்த பிரபாஸ்
Published on

இப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். `பாகுபலி-2' படத்திற்காக, அவர் எடுத்துள்ள முயற்சி மற்றும் உழைப்பினை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அதுவும் படத்திற்காக 5 வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் `பாகுபலி' படத்திற்காக தனது முழு பங்களிப்பையும் அளித்திருந்தார்.

இதனாலேயே பிரபாஸை பலமேடைகளில், பலமுறை ராஜமவுலி பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் `பாகுபலி-2' படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது பிரபாஸ் பணக்கஷ்டத்தில் இருந்ததாகவும் ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, `பாகுபலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, பிரபாஸ் தனது குடும்ப வாழ்க்கையிலும் இருந்து சற்றே ஒதுங்கி இருந்துள்ளார். அதாவது, `பாகுபலி' படத்தில் நடித்த அந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 6,000 பேர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் `பாகுபலி' படத்தில் நடிக்கும் ஒரே காரணத்திற்காக அனைத்து பெண்களையும் பிரபாஸ் நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com