நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’: நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது நடிகை ஓவியா தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான தகவலை அடுத்து ஓவியா நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’: நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு
Published on

தனியார் தொலைக்காட்சி யில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் பேச்சும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. நடிகை காயத்திரி ரகுராம், “சேரி பிகேவியர்”, “மயிர்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது பிரச்சினையானது.

இதில் எப்போதும் கலகலப்புடனும், சுறுசுறுப்படனும் இருந்த நடிகை ஓவியா திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளரான ‘ஆரவ்’ உடன் காதல் வயப்பட்டு அது தோல்வி அடைந்ததால் இந்த நிலைக்கு மாறியதாக ஓவியா தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஒருநாள் மழையில் திறந்த வெளியில் தூங்கினார். இதை ஆரவ் கண்டுபிடித்து அவரை மீட்டு அழைத்துச் சென்றார். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா குதித்தார். அப்போதும் அவரை ஆரவ் காப்பாற்றினார். ஓவியாவின் இந்த செயலால் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் மனநல சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தவித வெளிதொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் அனுமதியுடன் மட்டுமே அவர்கள் வெளியே வர முடியும். கடந்த 4-ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காட்சி இடம் பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தங்களின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கவே தயாரிப்பாளர்கள் தூண்டுதலின் பேரில் மற்றவர்கள் நடிகை ஓவியாவை இந்த நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர். எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு ஏற்கனவே இதுபற்றி புகார் வந்தது. அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தி திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com