படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை செய்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு
Published on

பெப்சி தொழிலாளர்கள் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கம்போல், படப்பிடிப்பு நடக்கும், தயாரிப்பு பணிகளில் ஈடுபட இருப்பதால், பணியில் ஈடுபட்டிருக்கும் உறுப்பினர்களின் படப்பிடிப்புகளுக்கு எந்த தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என்று பெப்சி உறுப்பினர்களை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

தடங்கல் ஏற்படுத்தினால் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில், ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை செய்வதை தடுக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது நிலவி வரும் அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படம் தயாரிப்பவர்கள் தங்கள் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் நாள், இடம், நேரம் ஆகிய விவரங்களை உடனே சங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com